பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' |
அழகியபாண்டிபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தி. 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களில்தான் ஹீரோயினாக நடித்தார். கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது ஜம்புலிங்கம் 3டி என்ற படத்தில் தற்போது அறம் செய் என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் லொள்ளுசபா ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மீனாட்சி மேகாளி, நித்யா ராஜ், பாய்ஸ் ராஜன், திலீபன், நான் கடவுள் தீனதயாளன், ரஞ்சன் குமார், யோகிராம், சோனா, அஞ்சலிதேவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தாரகி சினிமா தயாரிக்கிறது. பாலு எஸ்.வைத்தியநாதன் இயக்குகிறார்.