'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தில் நடித்த அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் அதிதி ஷங்கர், நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆடையில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முதல் நாள் கோல்டன் கலரில் உடை அணிந்து போட்டோ சூட் நடத்திய அதிதி, அடுத்த நாள் சிகப்பு கலரில் போட் சூட் நடத்தி இருக்கிறார். மூன்றாவது நாள் நீல நிற உடையிலும், நான்காவது நாள் தங்க நிற உடையிலும், ஐந்தாவது நாள் பச்சை நிற உடையிலும், ஆறாவது நாள் கிரே கலர் புடவையிலும், ஏழாவது நாள் ஆரஞ்சு நிறத்திலும், எட்டாவது நாள் பச்சை நிறத்திலும் உடையணிந்து வித விதமான தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாகின.