கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
நாகார்ஜுனா நடித்த தி கோஸ்ட் தெலுங்கு படம் அக்டோபர் 5ம் தேதி வெளிவர இருக்கிறது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கர்னூல், எஸ்டிபிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாகார்ஜுனாவுடன் அவரது மகன்களும் நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நாகார்ஜுனா பேசியதாவது: தி கோஸ்ட் முழுநீள ஆக்ஷன் படமாகும். இந்த படத்துக்காக நானும் சோனலும் ராணுவ பயிற்சி எடுத்தோம். அது எல்லாமே படத்தில் வரும் துப்பாக்கி சண்டை காட்சிகளுக்காக. படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு இது பிடிக்கும்.
பங்கர்ராஜு படத்தில் மூத்த மகன் நாக சைதன்யாவுடன் நடித்தேன். அந்த படம் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அகிலுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அது எனது 100வது படமாகும். என்றார்.