லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தென்னிந்திய நடிகைகளில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருப்பவர் 'வாரிசு' கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. அவருக்கு 33.6 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். அதற்கடுத்து 24.2 மில்லியன் பாலோயர்களுடன் சமந்தா, 23.7 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால், 22.5 மில்லியன் பாலோயர்களுடன் ரகுல் ப்ரீத் சிங், 21.5 மில்லியன் பாலோயர்களுடன் பூஜா ஹெக்டே ஆகியோர் உள்ளார்கள்.
இவர்களில் குறிப்பிட்ட சில புகைப்பட பதிவுகளுக்கு அதிக லைக்குகளை வாங்குபவர்களில் ராஷ்மிகாவும், பூஜாவும் முன்னணியில் உள்ளார்கள். அவர்களது சில புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் லைக்குகளைக் கடந்துவிடும். இருவரில் யார் முன்னணி என்றால் அது ராஷ்மிகாதான். அவருடைய புகைப்படப் பதிவுகள் இரண்டு மில்லியன் லைக்குகளை சுலபத்தில் தொட்டுவிடுகிறது.
நேற்று இரவு கூட சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார் ராஷ்மிகா. 15 மணி நேரத்திற்குள்ளாக அந்தப் புகைப்படங்கள் இரண்டு மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. 'வாரிசு' படமும், ஹிந்தியில் 'குட் பை' படமும் வெளிவந்துவிட்டால் ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் இன்னும் அதிகமாகி, அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம்.