நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பிக்பாஸ் சீசன் 6-க்கான புதிய புரோமோ கமல் அதிரடியாக எண்ட்ரி கொடுப்பது போல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியானது வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சோஷியல் மீடியாக்களிலும் பிக்பாஸ் 6-ன் முதல் 6 பெண் போட்டியாளர்கள் என இப்போதே உத்தேச பட்டியல்களும் வெளியாகி பரவி வருகின்றன. அதில் முதல் இடத்தில் ராஜா ராணி 2-ல் வில்லியாக நடித்து கலக்கிய வீஜே அர்ச்சனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ராஜா ராணி 2ல் ஹீரோயின் ஆல்யாவுக்கு அடுத்ததாக அதிகம் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா தான். இந்நிலையில், சூப்பர் ஹிட்டாக சென்று கொண்டிருந்த அந்த தொடரிலிருந்து அர்ச்சனா திடீரென வெளியேறினார். மேலும், வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் 6க்கான உத்தேச பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளதால் இதற்காக தான் அர்ச்சனா சீரியலை விட்டு விலகினாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.
மேலும், அந்த உத்தேச பட்டியலில் அர்ச்சனாவுடன் குக் வித் கோமாளி ரோஷினி, தர்ஷா குப்தா, வீஜே அஞ்சனா, சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி, சினிமா நடிகைகள் மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. எனினும், இந்த உத்தேசப் பட்டியல் அதிகாரப்பூர்வமானதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.