சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'விக்ரம்'. ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வசூலைக் குவித்தது.
தமிழில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக புதிய சாதனையையும் படைத்தது. தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஜுலை 8ம் தேதி இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். ஆனால், ஒரு மாதத்திற்குள்ளாகவே தியேட்டர்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து ரசிகர்களின் கூட்டம் குறைய ஆரம்பித்ததால் ஒரு மாத ஓடிடி வெளியீட்டிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் அதற்குப் பின்னும் சில பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

இன்றுடன் படம் வெளிவந்து 100 நாட்கள் ஆகிறது. இன்று கூட சென்னை, கோவை, தர்மபுரி ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டரில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடிடியில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ஒரு படம் தியேட்டர்களில் ஓடி 100வது நாளைத் தொட்டிருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
'விக்ரம்' 100வது நாளைத் தொட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “ரசிகர்களின் ஆதரவோடு, 'விக்ரம்' திரைப்படம் 100வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த உணர்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். 'விக்ரம்' வெற்றிக்குக் காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும், வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.