‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜுமேனன் இருவரும் இணைந்து நடித்திருந்த இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஹிந்தியில் இந்தப்படம் ஜான் ஆபிரகாம் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை இயக்கி வருவதால் தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தாமல் தள்ளி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழில் வெளியானால் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தயாரிப்பாளர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இது அமைந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்தின் ஒரிஜினலை இயக்கிய மறைந்த இயக்குனர் சாச்சி இதன் தமிழ் ரீமேக்கில் கார்த்தியும் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




