100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
சின்னத்திரையில் ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது படங்களிலும் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திண்டிவனத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். புதுமண தம்பதியரை பலரும் வாழ்த்தினர். அதேசமயம் புகழ் ஓராண்டுக்கு முன்பாகவே பென்சியாவை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் வெளியாகின. இதனால் புகழை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக புகழ் பதிவிட்டுள்ளதாவது : ‛‛என் தந்தை அன்பிற்கு ஒரு முறை… என் தாய் அன்பிற்கு ஒரு முறை… என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார் . இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுகே'' என பதிவிட்டுள்ளார்.