கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் |
2022ம் ஆண்டில் ஒரு படக்குழுவினரால் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தி சொல்லப்பட்ட படங்களில் ஒன்று 'லைகர்'. தெலுங்கின் ஹாட் ஹீரோ விஜய் தேவரகொண்டா, பாலிவுட்டின் ஹாட் கதாநாயகி அனன்யா பாண்டே, கரண் ஜோஹர் இணைந்த தயாரிப்பு, முன்னாள் உலகக் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் சிறப்புத் தோற்றம் என என்னென்னமோ சொன்னார்கள்.
ஆனால், படம் வெளிவந்த பின் “இதற்காகவா இவ்வளவு பில்டப் கொடுத்தீர்கள்” என விமர்சகர்களும், ரசிகர்களும் ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். படத்தில் கதையம்சம் என்ற ஒன்றுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என இந்தப் படமும் திரையுலகினருக்கு உணர்த்தியது.
தினமும் அந்தப் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள், மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் படக்குழுவினருக்கு தனி மனதைரியம் வேண்டும். அதனாலோ என்னவோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நடிகையான சார்மி கவுர் தற்காலிகமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார்.
அவற்றில் மிகவும் ஆக்டிவ்வாகவே இருந்த சார்மி அவரது பதிவில், “சில் கைஸ், சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன். பூரி ஜெகன்னாத் மீண்டு வருவார், பெரிதாக, சிறப்பாக…அது வரை... வாழு வாழ விடு,” என விலகலுக்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.