அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழில் 'நடிகையர் திலகம்' என டப்பிங் ஆகி வெளிவந்த 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கிய வருகிறார். பிரம்மாண்டமான பொருட் செலவில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
தீபிகா படுகேனே கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளுக்கும் பிரபலமான நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளுக்காக மேலும் சில நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்து சூர்யா, மலையாளத்திலிருந்து துல்கர் சல்மான், மேலும் தெலுங்கு ஸ்டார் ஆன மகேஷ் பாபு ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள் என சொல்லி வருகிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.