பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. விக்ரம் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்தவாரம் ஆக., 31ல் படம் வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலர் இன்று(ஆக.,25) மாலை 5.15 மணியளவில் வெளியிடப்பட்டது.
டிரைலரின் துவக்கத்திலேயே விக்ரமை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு போலீசார் அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதன்பின் ரஷ்யாவில் விரிவடையும் காட்சிகள், அதில் விக்ரம் பல விதமான வேடங்களில் தோன்றுவது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கணித வாத்தியரான விக்ரமின் வாழ்வில் ஏதோ ஒரு விபரீத சம்பவ நடக்க, அதற்கு பழிதீர்க்க தனது கணித அறிவால் வில்லன்களை பழிதீர்ப்பது போன்று படம் இருக்கும் என டிரைலரை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
‛‛அவன் ஒரு கோப்ரா. உருமாறி உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்'' என வசனமும் இடம் பெற்றுள்ளது. அதாவது கோப்ரா நாகத்தின் தன்மை தான் விக்ரமின் கேரக்டர் என்பதை குறிக்கும் விதமாக இந்த பட தலைப்பும், விக்ரமின் கேரக்டரும் அமைந்து இருக்கும் என தெரிகிறது. டிரைலர் வெளியான அரை மணிநேரங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தொடர்ந்து கோப்ரா டிரைலர் வைரலாகி டிரெண்ட் ஆனது.