வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவில் 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா. தொடர்ந்து 'கற்றது தமிழ்' படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா, டீனேஜ் வயதில் 'காதல் கசக்குதய்யா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கொள்ளை கொள்ளும் பேரழகால் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து 'பள்ளிப் பருவத்திலே', 'மாயநதி', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு ஹீரோயின் மார்க்கெட்டில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
இந்நிலையில், வெண்பா தற்போது சின்னத்திரையின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் தற்போது, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சந்தியாராகம்' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகைகளை விட பெயர், புகழ் பெற்று பிரபலங்களாக வலம் வரும் நிலையில், வெண்பாவின் இந்த சீரியல் என்ட்ரி திரைத்துறையில் அவருக்கு இரண்டாவது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.