மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து பெரிய வெற்றி பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்க மோகன் ராஜா இயக்கத்தில் 'காட் பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து வந்தார்கள்.
இன்று(ஆக., 22) சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு இப்படத்தின் டீசரை யு டியுபில் வெளியிட்டார்கள். டீசர் முழுவதும் ஒரு ஆக்ஷன் படமாக, சிரஞ்சீவியின் படமாக இருக்கும் என உணர்த்துகிறது. மலையாளத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரம் சஸ்பென்சாக இருந்து கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வரும். அக்கதாபாத்திரத்தில் தெலுங்கில் சல்மான் கான் நடித்துள்ளார். அந்த சஸ்பென்சை நேற்று வெளியான டீசரிலேயே உடைத்துவிட்டார்கள்.
டீசரின் துவக்கத்தில் நயன்தாரா, பின்னர் சிரஞ்சீவி, கடைசியாக சல்மான்கான் என 'லூசிபர்' படத்தைத்தான் இப்படி மாற்றியிருக்கிறார்களா என ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது டீசர். மலையாளத்தில் பக்கா அரசியல் படமாக இருந்ததை தெலுங்கில் பக்கா மசாலா படமாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது. இருப்பினும் 24 மணி நேரத்திற்குள்ளாக தெலுங்கு டீசர் 74 லட்சம் பார்வைகளையும், ஹிந்தி டீசர் 22 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.