காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பிரபல ஜவுளிக்கடை அதிபரான அருள் சரவணன் லெஜண்ட் என்ற படத்தின் மூலம் திடீர் ஸ்டார் ஆனார். பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் 5 மொழிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாச்சியும் ரஜினி ரேன்ஞ்சுக்கு நடித்து அதிர்ச்சி கொடுத்தார். பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் நஷ்டத்தை கொடுத்தாலும் அண்ணாச்சி ஹேப்பியாக இருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தள பக்கங்களில் பிசியாகி உள்ள சரவணன், ரஜினியுடன் எடுத்துக் கொண்ட சில படங்களை வெளியிட்டு சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்களும், சூப்பர் ஸ்டாரும் திடீர் ஸ்டாரும் என கருத்து பதிவிட்டு வருகிறார்கள். தனது முந்தைய பேட்டி ஒன்றில் எனது நடிப்பில் ரஜினியின் தாக்கம் இருப்பது உண்மைதான். நான் அவரது ரசிகன் என்பதால் தவிர்க்க முடியவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.