ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‛ஓ மை கடவுளே' படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அந்த படத்தில் வாணி போஜனின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‛கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்' என்றார்.