நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
நடிகர் ஆர்யா உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உடையவர். ராண்டன்னியூரிங் எனும் நீண்ட தூர சைக்கிள் ஓட்டுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வந்தார் . அவர் நீண்ட நாட்களாக லண்டன் எடின்பர்க் லண்டன் (LEL) போட்டிக்கும் தயாராககி வந்தார். தற்போது லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்துள்ளார் ஆர்யா. அவரின் குழுவினருடன் இந்த நீண்ட சைக்கிள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். "எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க் 1540 கிமீ சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி " என்று தெரிவித்துள்ளார். ஆர்யாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கேப்டன் என்ற படத்தில் ஆர்யா நடித்துள்ளார். விரைவில் இந்தப்படம் திரைக்கு வருகிறது.