ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் தற்போது முதன்முறையாக வாரிசு என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவ வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பாலிவுட்டிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து இந்த படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்றும் அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எண்பது, தொண்ணூறுகளில் ஆக்சன் கிங்காக வலம் வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பிரபல ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். அந்த வகையில் முதன்முறையாக விஜய்யுடன் இவர் இணைந்து நடிப்பதும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்யும்.