அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கர்ராஜூ படங்களில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யா ஜோடியாகவும் நடிக்கிறார்.
இந்த நிலையில். நிதின் ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ள, மச்சர்லா நியோஜாகவர்கம் என்ற தெலுங்கு படம் வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் கிரித்தியிடம் பாலிவுட் படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டபோது அவர் கூறியதாவது:
பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நிராகரித்துவிட்டேன். தமிழ், தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிப்பதை விரும்புகிறேன். இங்கு நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதன்பிறகு பாலிவுட் பற்றி யோசிக்கலாம். ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சஜகம் தான். அதை ஓர் அனுபவமாக பார்க்கிறேன். என்றார்.