பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
நடிகர் கமல் தயாரிக்கும் 54வது படத்தில் நாயகனாக உதயநிதி நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னையில் அந்நிறுவனத்தின் சார்பில் விழா நடந்தது. இதில் உதயநிதி உடன் சிறப்பு விருந்தனர்களாக கமல்ஹாசன், ஆமீர்கான், கவுதம் மேனன், ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 54வது படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க உள்ளார்.
இதுபற்றி உதயநிதி வெளியிட்ட பதிவு : ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவித்தோம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.