இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல், மிருகம் உட்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இடையில் தமிழ், மலையாளம் இரண்டிலும் பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால் நியூயார்க்குக்கு படிப்பதற்காக சென்றார். சென்ற இடத்தில் ஜாஸ்மின் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2017 வரை தொடர்ந்து சினிமாவில் நடித்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். நடிகை ஒருவர் கடத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து நடிகர் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்து, மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய நடிகைகளின் இவரும் ஒருவர். அதன்பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பத்மபிரியா. இன்னொரு பக்கம் மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், விரைவில் இந்த படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அவரது இந்த ரீ என்ட்ரி வெற்றிகரமாக தொடரும் என எதிர்பார்க்கலாம்.