லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சமீபகாலமாக தன்னைக் கவர்ந்த படங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த படங்கள் குறித்த பாசிட்டிவான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் பார்த்திபன் இயக்கி, நடித்து தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
அவர் கூறுகையில், இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் படமாக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து பட குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இப்படி பார்த்திபனுக்கு ரஜினி எழுதிய கடிதம் அவர்கள் இருவரும் அடங்கிய ஒரு புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.