ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் இரவின் நிழல். இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற வந்த பிரிகிடாவை படத்தின் ஹீரோயின் ஆக்கினார் பார்த்திபன். இவர் ஏற்கனவே ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர். மேலும் கடந்த வாரத்தில் வெளியான இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரிகடாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமொஷனில் ஈடுபட்டிருந்த போது இரவின் நிழல் படத்தை பற்றி கூறியவர், உதாரணத்துக்காக ஒரு சேரி பகுதிக்கு சென்றால் அங்கு கெட்டவார்த்தை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக யாரும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் பிரிகிடா. இப்படி சேரி பகுதிக்கு சென்றால் கெட்டவார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என்று அவர் சொன்ன விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் பிரிகிடா. அந்த வார்த்தைகளை சொன்னதற்கு மனமார வருந்துகிறேன். இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது மொழியும் மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்தேன். நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக் கொண்டேன். அதைச் சொன்னதற்காக நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரிகிடா.
அவரைத்தொடர்ந்து, தற்போது பார்த்திபனும் பிரிகிடா சார்பாக மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989ல் நடக்கும் கதை இது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம் கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். பெரும்பாலும் என் படங்கள் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே'' என்று தெரிவித்து இருக்கிறார்.