30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
‛ஜெய்பீம்' படம் தொடர்பான வழக்கு விசாரணையில் சூர்யா உள்ளிட்டோர் மீது எந்த கடும் நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், அதேசமயம் சர்ச்சையையும் கிளப்பிய படம் ‛ஜெய்பீம்'. இந்த படத்தில் வன்னியர்களை புண்படுத்தும் விதமாக காட்சியமைப்புகள், குறியீடுகள் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதை ஏற்று, வழக்கை ஜூலை 21க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டார்.