பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள படம் தேஜாவூ. இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருப்பதோடு இணை தயாரிப்பாளராகவும் இணைந்திருக்கிறார்.
டி பிளாக் படத்திற்கு பிறகு வெளியாகும் அருள்நிதி படம் இது. இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், அருள் நிதியின் அண்ணனுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். டிரைலரை பார்த்து படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அனேகமாக படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடலாம் என்று தெரிகிறது. படம் வருகிற 22ம் தேதி திரைக்கு வருகிறது.