ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா |

மலையாளம், தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரகுமான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மைத்துனர். ரகுமானின் இன்னொரு முகம் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர். அகில இந்திய ஸ்னூக்கர் கிளப்பிலும் அங்கம் வகிக்கிறார். மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம் தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் நடிகர் ரகுமான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். சிங்கிள்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தையும், டபுள்ஸ் போட்டியில் முதல் இடத்தையும் பிடித்து பரிசு பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வேண்டுமென்றால் முதலில் மனதால் நம்மை தயார் படுத்த வேண்டும் . கவனம் சிதற கூடாது. ஆனால் படங்களின் டப்பிங் வேலைகள் மற்ற வேலைகள் காரணமாக என்னை தயார் படுத்தவோ கவனமாக விளையாடவோ இயலவில்லை. அடுத்த முறை நிச்சயமாக மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்டு எல்லா பிரிவுகளிலும் முதலிடத்தை பெற முயற்சிப்பேன். என்கிறார் ரகுமான்.