விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிக்க, சாம் இசையமைத்து வருகிறார். பகாசூரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் சிவன் பாடலுக்கு செல்வராகவன் முதன் முதலாக நடனம் ஆடியுள்ளார். இதற்காக உரிய பயிற்சி பெற்று நடனம் அடி உள்ளார் செல்வராகவன்.

டப்பிங் ஆரம்பம்
இது ஒருபுறம் இருக்க செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது . தற்போது இந்த படத்தின் மற்ற பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ட்ரைலர் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை செல்வராகவன் தொடங்கியுள்ளார். அவர் நடித்த காட்சிகளுக்காக டப்பிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். செப்., 30ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது.