அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலம்பெற்று வீடு திரும்பிய நடிகர் விக்ரம், ஒருநாள் ஓய்வுக்கு பின் இன்று(ஜூலை 11) தனது கோப்ரா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் விக்ரம். இவற்றில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் விக்ரமும் பங்கேற்றார்.
சில தினங்களுக்கு முன் நடிகர் விக்ரமிற்கு மார்பு பகுதியில் அசவுகரியம் ஏற்பட்டது. இதற்காக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்ரம், இருதினங்களுக்கு பின் சனிக்கிழமை அன்று வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று ஒரு நாள் ஓய்வெடுத்தவர் இன்று கோப்ரா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார். அவருடன் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமின் மகன் துருவ், அஜய் ஞானமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛கோப்ரா' படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.