ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் தமிழ்த் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என சில நடிகர்களே குரல் கொடுப்பார்கள். ஆனால், அவர்களே பேசியதற்கு மாறாக தமிழ்த் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து அடுத்த மொழி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர் தற்போது தெலுங்குத் தயாரிப்பாளர்களின் படங்களில்தான் நடித்து வருகிறார்கள். விஜய் நடித்து வரும் 'வாரிசு', தனுஷ் நடித்து வரும் 'வாத்தி', சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான்.
அவர்களது வரிசையில் அடுத்து சூர்யாவும் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. சிறுத்தை சிவா இயக்க உள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்நிறுவனம் தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'சாஹோ, ராதேஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்ட நடிகர்களைப் போல இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட்பிரபு, சமுத்திரக்கனி ஆகியோரும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு படங்களை இயக்கி வருகிறார்கள்.