நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து, வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. போனி கபூர் தயாரித்தார். ஹிந்தியில் வெளியான ஆர்டிக்கிள் 15 படத்தின் ரீ-மேக்காக இந்த படம் வெளியாகி வரவேற்பும் பெற்றது. இப்படத்தை பார்த்த கமலஹாசன் படக்குழுவை பாராட்டியிருக்கிறார். அதோடு தான் நடித்த விக்ரம் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போது நினைவு பரிசு வழங்கி இருக்கிறார் கமல். அதனைத்தொடர்ந்து தனது நெஞ்சுக்கு நீதி படக் குழுவின் சார்பாக கமலுக்கு அம்பேத்கர், ஈவேரா சிலையை பரிசாக அளித்திருக்கிறார் உதயநிதி. இது குறித்து உதயநிதி கூறுகையில், ‛‛நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரமில் உடன் பங்கேற்றதிற்காக நினைவு பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம் என்று பதிவிட்டு, அது குறித்த புகைப்படங்களையும் இணைத்துள்ளார் உதயநிதி.