'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து வருகிறார்கள். மோகன்ராஜா இயக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டன. வீடியோவில் சிரஞ்சீவியின் பெயரை ஆங்கிலத்தில் 'Chiranjeeevi' என மூன்று 'e' சேர்த்திருந்தார்கள். ஆனால், மற்ற இடங்களில் ஒரு வழக்கம் போல இரண்டு 'e' மட்டும் தான் இருந்தது. இருப்பினும் நியூமராலஜிபடி சிரஞ்சீவி தனது பெயரில் மேலும் ஒரு 'e' சேர்த்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஆச்சார்யா' படம் படுதோல்வி அடைந்ததால்தான் அவர் இப்படி மாற்றிவிட்டார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், சிரஞ்சீவி தரப்பில் அதை மறுத்துள்ளார்களாம். கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த தவறு அது என்றும் தெரிவித்துள்ளார்கள். விரைவில் அதைச் சரி செய்து புதிய வீடியோவை வெளியிடப் போகிறார்களாம்.