புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
நடிகர் சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்து பூரணமாக குணமடைந்துள்ளார்.
இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர் என தமிழ் சினிமாவில் சகலகலா வித்தகர் என பெயர் எடுத்தவர் டிராஜேந்தர். இவர் இயக்கி, நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. இவரது மகனான சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதற்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். சிம்பு இதற்கான பணிகளை முன்னின்று கவனித்து வந்தார்.
தற்போது டி.ராஜேந்தருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட சிம்பு, தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர்.
பாண்டியராஜன், நெப்போலியன் சந்திப்பு
இதனிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டி.ராஜேந்தரை நடிகர்கள் பாண்டியராஜன், நெப்போலியன் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் வெளியிட்டுள்ளார். அதில் தனது வழக்கமான அடுக்கு தமிழில் பேசி அனைவரையும் அசர வைத்துள்ளார்.