ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று அழைக்கப்படுகிறவர் மகேஷ்பாபு. இவர் நடித்த சர்காரு வாரிபட்டா படம் சமீபத்தில் வெளியானது. படம் பற்றிய விமர்சனங்கள் பலவிதமாக இருந்தாலும் வசூலை குவித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்தது. அடுத்ததாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
தற்போது கிடைத்துள்ள இடைவெளியில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் மகேஷ் பாபு. இந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக அவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்துள்ளார். பில் கேட்ஸ், மகேஷ் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, "மிஸ்டர். பில் கேட்ஸைச் சந்தித்ததில் மகிழ்ச்சி! இந்த உலகம் கண்ட மிகப் பெரிய தொலைநோக்கு பார்வையாளரில் ஒருவர், மிகவும் பணிவானவர், உண்மையிலேயே அவர் ஒரு உத்வேகம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.