ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா வந்த இந்த இரண்டாண்டு கால கட்டத்தில் ஓடிடி நிறுவனங்கள் மிகவும் பிரபலமடைந்தன. தியேட்டர்களில் வெளியிடாமல் சில படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். அதற்கு முதலில் எதிர்ப்பு வந்து பிறகு அடங்கிப் போனது. அதன்பின்பு ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதை அமல்படுத்தினார்கள். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதைத்தான் பின்பற்றி வந்தார்கள்.
படம் வெளியான ஒரு மாதத்தில் ஓடிடி தளங்களில் வந்துவிடுவதால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது. நான்கு வாரங்கள் காத்திருப்பதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அது குறித்து புதிய அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி வரும் ஜுலை 1ம் தேதி முதல் தியேட்டர்களில் படம் வெளியான 50 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளார்கள்.
இதனால் ஓடிடி உரிமைக்கான விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர்களில் வரவேற்பு இல்லாத படங்களை உடனடியாக ஓடிடி தளங்களில் வெளியிட அந்நிறுவனங்கள் நல்ல விலையைத் தருகின்றன. இப்படி 50 நாட்கள் கட்டுப்பாடு கொண்டு வந்தால் தியேட்டர்களில் ஓடாத படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டி வரும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை பின்பற்றுமா என்பது இனிமேல்தான் தெரியும்.