சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? | அர்ஜூன் தாஸிற்கு விருது கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்த சாந்தகுமார்! | ‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் | தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்தப் படம் மட்டுமல்லாமல் ஷங்கர், ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தையும் தயாரித்து வருகிறார். பல தெலுங்கு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும் கூட.
இவருக்கு 2020ம் ஆண்டு வைகா ரெட்டி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா உடல் நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
52 வயதான தில் ராஜுவை விட பல வயது குறைந்தவர் அவரது இரண்டாவது மனைவி வைகா. கர்ப்பமடைந்திருந்த வைகா இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை நலமுடன் பெற்றெடுத்தார். 'வாரிசு' படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவர் அப்பாவுடன் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தில் ராஜுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.