நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி |
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் அவருடன் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றில் முக்கிய முதலீட்டாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதோடு அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனபோதிலும் தான் முதலீடு செய்த தொகை குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி இந்திய சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகளும் இதுபோன்று அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பேஷன் துறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.