ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கில் ராணாவுடன் நடித்த விராட பர்வம் படத்திற்கு பிறகு சாய்பல்லவி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கார்கி. தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தினை 'ரிச்சி' படத்தின் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். ஷ்ரயான்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஹீரோயின் சப்ஜெக்ட் படம்.
இந்த படத்தை தமிழில் சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




