ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வந்த விக்ரம் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்போது வரை நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தப்படத்தின் வசூல் காரணமாகவே ஏற்கனவே தமிழில் வெளியாக இருந்த யானை உள்ளிட்ட சில படங்களின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தார்கள். அதோடு தமிழகத்தில் பாகுபலி -2 படத்தின் வசூலை விக்ரம் படம் தாண்டி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இந்த படம் 25 நாட்களை எட்டி உள்ளது. அதோடு ஏரியா வாரியாக விக்ரம் படம் வசூல் செய்த தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் 162 கோடி, கேரளாவில் 36 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 29 கோடி, கர்நாடகாவில் 22 கோடி இது தவிர வெளிநாடு ரிலீஸ் என ஒட்டுமொத்தமாக விக்ரம் படம் இதுவரை 375 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.