தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும்படியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் படம் வெளியாகிறது.
இயக்குனர் வம்சி கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.