கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது. மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது, சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார். தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார். மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.