நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில், சாயம் படத்தை இயக்கிய ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி என்னும் நட்ராஜ் நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பூஜையில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில், மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தில் ‛முந்திரிக்காடு' படத்தில் நடித்த சுபபிரியாமலர் கதாநாயகியாக நடிக்க, மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தை பற்றி ஆண்டனி சாமி கூறுகையில், ‛2018-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கதை. இந்த திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது, இது நிச்சயமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்,' என்றார்.