ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடித்துள்ள படம் ‛கேப்டன்'. ஏலியன் மாதிரியான கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சிம்ரன், ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதி உள்ளார். பாடல் கம்போசிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார் இமான். மெலோடி பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது. இமான் இசையில் யுவன் பாடுவது புதிதல்ல. ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அதேப்போன்று பிரியாணி படத்தில் யுவன் இசையில் இமானும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.