மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வெளியாகும் பல படங்கள் கேரளாவில் மலையாளத்தில் டப்பிங் ஆகாமல் தமிழிலேயே வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. கேரளாவைப் பொறுத்தவரையில் தற்போது விஜய் நடிக்கும் படங்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
இதற்கு முன்பு வெளியான தமிழ்ப் படங்களில் விஜய் நடித்த 'பிகில், மெர்சல், தெறி' படங்களும், ரஜினிகாந்த் நடித்த '2.0, கபாலி' படங்களும், விக்ரம் நடித்த 'ஐ' படமும் 15 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் சாதனைகளை தற்போது கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் முறியடித்துள்ளது.
நான்கு நாட்களில் கேரளாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான வசூலை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது. எப்படியும் 30 கோடி வசூலைத் தாண்டும் என்று சொல்கிறார்கள். இப்படத்தில் மலையாளத்தில் பல வருடங்களாகத் தெரிந்த நடிகரான கமல்ஹாசன் உடன், மலையாள நடிகரான பகத் பாசில் இருப்பதுதான் இப்படியான வசூலுக்குக் காரணம் என்கிறது மல்லுவுட்.
ரஜினிகாந்த், விஜய், விக்ரமைக் காட்டிலும் மலையாளத்தில் 40 வருடங்களுக்கு முன்பு சில பல வெற்றிப் படங்களில் நடித்த கமல்ஹாசன் படம் தற்போது நம்பர் 1 சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.