அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் வந்து செல்பவர்கள் கூட ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் வலது கைகளில் ஒருவராக நடித்திருந்த நடிகர் ஜாபர் சாதிக் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளார். குறிப்பாக அவர் எதிரிகளை தாக்குவதற்கு கையாளும் டெக்னிக் வித்தியாசமாக இருந்தது. இவர் அடிப்படையில் டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட ஜாபர் சாதிக், முதலில் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாகவே இல்லை என்றும் அவருக்கு முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரைத்தான் லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்தார் என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரிடமும் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததாலோ என்னவோ மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்திலும் விஜய்சேதுபதியை லோகேஷ் கனகராஜ் வில்லன் ஆக்கிவிட்டார்” என்று கூறியுள்ளார் ஜாபர் சாதிக்.