அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
2022ம் ஆண்டின் ஆரம்பம் கொரோனா ஒமிக்ரான் அலையால் கொஞ்சம் தடுமாறினாலும் சில பல வெற்றிப் படங்களால் அந்த தடுமாற்றம் சரியானது. கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த ஆறு மாத காலங்களில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் அவர்களது மகிழ்ச்சி இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.
இந்த ஜுன் மாதத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை', ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷங்க', விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' ஆகியவை எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.
ஜுலை மாதத்தில் மாதவன் நடித்துள்ள 'ராக்கெட்ரி', பார்த்திபன் நடித்துள்ள 'இரவின் நிழல்', தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்', எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'பொம்மை' ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', விஷால் நடிப்பில் 'லத்தி', சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன.
வினாயக சதுர்த்தி அன்று கார்த்தி நடித்துள்ள 'விருமன்', சிவகார்த்திகேயனின் 20வது படம் ஆகியவை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
செப்டம்பர் மாதத்தில் ஆர்யா நடிப்பில் 'கேப்டன்', ஜெயம் ரவி நடிப்பில் 'அகிலன்' ஆகிய படங்கள் வர உள்ளன. அம்மாதத்திலேயே மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் செப்., 30ல் வெளியாக உள்ளது.
இவை தவிர மேலும் சில மீடியம் பட்ஜெட் படங்களும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. தியேட்டர்கள் கிடைப்பதைப் பொறுத்து அப்படங்களும் வெளியாகும். அடுத்த ஆறு மாதங்களில் 100 படங்கள் வரை வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.