லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2023 பொங்கலை முன்னிட்டு தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் சில பல புதிய படங்கள் முதல் முறையாக ஒளிபரப்பாகின. விஷால் நடித்த 'லத்தி', தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே', கார்த்தி நடித்த 'விருமன்', சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு', ரிஷப் ஷெட்டி நடித்த 'காந்தாரா', சசிகுமார் நடித் 'காரி', ஜீவா, ஜெய் நடித்த 'காபி வித் காதல்' ஆகிய படங்கள் தான் அந்த புதிய படங்கள்.
இத்தனை படங்களில் விஷால் நடித்த 'லத்தி' படம் தான் ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆச்சரியப்படும் விதத்தில் 'லவ் டுடே' மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 'விருமன்' படம் நான்காவது இடத்தையே பிடித்தது. அதே சமயம் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' அன்றைய தினங்களில் ஒளிபரப்பான சில பழைய படங்களை விடவும் குறைவான ரேட்டிங்கைப் பெற்று ஒன்பதாவது இடத்தையே பிடித்துள்ளது.
“நம்ம வீட்டுப் பிள்ளை, தெறி, பிச்சைக்காரன், பேட்ட” ஆகிய படங்கள் முறையே 5,6,7,8வது இடங்களைப் பிடித்துள்ளன.