பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சமுத்திரகனி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த 'ரைட்டர்', விநோத சித்தம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் வினோத சித்தம் திரைப்படத்தை ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தை அடுத்து 'அப்பா 2' படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'விமானம்' படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.