பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'நெஞ்சுக்கு நீதி'. ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். உதயநிதி நடிக்கும் படம் என்றாலே கலகலப்பான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஒரு சீரியசான படத்தில் அவர் நடித்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இருப்பினும் 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமிழுக்குப் பொருத்தமான காட்சிகளை அமைத்து இங்குள்ள ரசிகர்களையும் ரசிக்க வைத்துவிட்டார்கள்.
இப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு நிகழ்வில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசு படத்தின் வசூல் பற்றிய தகவலை வெளியிட்டார். 12 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்து 6 கோடி ரூபாயை ஷேர் ஆக பெற்றுத் தந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது இந்தப் படம் என்றார்.
உதயநிதி நடிப்பில் அடுத்து 'கண்களை நம்பாதே', மகிழ்திருமேனி இயக்கி வரும் படம், 'மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.