ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
கல்யாணம் முதல் குழந்தை பிறந்தநாள் வரை 'போட்டோஷுட்' நடத்துவது இந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். திருமணத்தன்று விதவிதமான புகைப்படங்கள், கேன்டிட் புகைப்படங்கள் என பலரும் எடுப்பதுதான் இப்போதைய பேஷன்.
சாதாரண மக்களே அப்படி எடுக்கும் போது பேஷன் உலகில் இருப்பவர்கள் அதைவிட அதிகமாகவும் எடுக்கத்தானே செய்வார்கள். சாதாரண நாட்களிலேயே விதவிதமாக போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் சினிமா நடிகையர். அவர்களுக்கு விசேஷமாக இருப்பது எப்படியெல்லாம் எடுப்பார்கள்.
அப்படிப்பட்ட விசேஷங்களில் ஒன்று தாய்மை. கர்ப்ப காலத்தில் 'பிரக்னென்சி போட்டோகிராபி' எடுப்பது பிரபலங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்த வகையில் நடிகை நமீதாவும் தற்போது அப்படிப்பட்ட போட்டோஷுட் ஒன்றை எடுத்திருக்கிறார். அதற்கான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்த நமிதா இன்னும் அதிகமான புகைப்படங்களைப் பதிவிட்டிருக்கலாம்.