நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவின் என்றைக்குமான காதல் நாயகன் என்றால் அது கமல்ஹாசன் மட்டும்தான். அவருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு கமல்தான் முன்னோடி. அந்தக் காலத்தில் அவருடைய முத்தக் காட்சிகளும், கட்டிப்புடி காட்சிகளும் அவ்வளவு பிரபலம். அவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் அப்போது ஆசைப்பட்டாலும் கமல்ஹாசனின் 'ரொமான்ஸ் பிடி'யில் சிக்கிடுவோமோ என அச்சப்பட்டார்கள் என்பதும் உண்மை. 'புன்னகை மன்னன்' படத்தில் ரேகா மாதிரியான குடும்பப் பாங்கான நடிகைக்கே முத்தம் கொடுத்து அதிர்ச்சியூட்டியவர் கமல்ஹாசன்.
அவர் நடித்து நேற்று வெளிவந்து 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி யாரும் இல்லை என்பது ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. படத்தில் கதாபாத்திரப்படி அவர் தாத்தா வயதுடையவராகக் காட்டப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கமல்ஹாசனை விட வயதில் மூத்தவரான ரஜினிகாந்த் கூட இப்போதும் 30 பிளஸ் நடிகைகளுடன் ஜோடியாக காதல் காட்சிகளில் நடிக்கும் போது தமிழ் சினிமாவில் காதலை கற்றுக் கொடுத்த கமல்ஹாசன் எண்பது வயதில் கூட ஜோடியுடன் நடிப்பதில் தவறில்லை என்றும் சில கமல் ரசிகர்கள் நேற்று தியேட்டர்களில் கிசுகிசுத்ததைப் பார்க்க முடிந்தது.
பிளாஷ்பேக்கிலாவது கமல்ஹாசனை கொஞ்சம் இளமையாகக் காட்டி, அவருக்கு ஒரு ஜோடியை சேர்த்து சில பல ரொமான்ஸ் காட்சிகளை 'விக்ரம்' படத்தில் வைத்திருந்தால் இன்றைய 40 பிளஸ் கமல்ஹாசன் ரசிகர்கள் கொஞ்சம் திருப்தியடைந்திருப்பார்கள்.