23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு இயக்குனர்களும், நடிகர்களும், நடிகைகளும் செல்வது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், தமிழ்க் கலைஞர்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளாது ஹிந்தித் திரையுலகம். அதில் நடிகைகள் மட்டும் விதிவிலக்கு.
இங்கிருந்து செல்லும் இயக்குனர்கள் வித்தியாசமாக, பிரம்மாண்டமாக யோசிக்கத் தெரிந்தால் மட்டுமே ஹிந்தியில் வெற்றி பெறமுடியும். தமிழில் விஜய்யுடன் தொடர் வெற்றிகளைக் கொடுத்த 'பிகில்' படத்திற்குப் பிறகு ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் கடந்த சில வருடங்களை செலவிட்டார். தட்டுத் தடுமாறி பல தடைகளைக் கடந்து ஆரம்பமான அந்தப் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.
'ஜவான்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படம் ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அட்லீ பொதுவாக பழைய தமிழ்ப் படங்களைக் காப்பியடித்துத்தான் படமெடுத்துள்ளார். ஆனால், 'ஜவான்' டைட்டில் டீசருக்கு பழைய தமிழ்ப் படம் பக்கம் போகவில்லை. புதிய தமிழ்ப் படம் பக்கம்தான் போயிருக்கிறார்.
நேற்று கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீசரை 2020ம் ஆண்டு வெளியிட்டிருந்தார்கள். அதே கான்செப்ட்டில் தான் 'ஜவான்' டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இரண்டு படத்திற்கும் அனிருத் தான் இசை. இரண்டு டீசர்களுக்கும் 6 வித்தியாசங்கள் என்னென்ன என்று இயக்குனர் அட்லீ சொன்னால் நன்றாக இருக்கும்.
நேற்று 'விக்ரம்' படம் பற்றிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்க கூடவே இந்த 'ஜவான்' காப்பியையும் ரசிகர்கள் விமர்சிக்கத் தவறவில்லை.